Tamil Translation of Hindi Bachan
From Bachan Babuji Maharaj, Part II, one bachan is taken and translated in Tamil and presented here for the sake of those who cannot read and understand Hindi.
RADHASOAMI
பாபுஜி மகாராஜ் அவர்களின் சொற்பொழிவு இரண்டாவது பகுதி
பசன் பாபுஜி மகாராஜ்: தூஸ்ரா பாக்
அலகாபாத்
27-8-1937
சம்சாரத்தின் (உலகியல்) மற்றும் சுயநலத்தின் செயலும், பரமார்த்தத்தின் (உலகிற்கு அப்பாற்பட்ட தெய்வீகமான) செயலும் முற்றிலும் வேறுபட்டவை. இதற்குக் காரணம், பரமார்த்தத்தின் செயல் உள்நோக்கியும், சம்சாரத்தின் செயல் வெளிநோக்கியும் இருப்பதுதான். சுரத் (மனதின் கலப்படம் அறவே அற்ற ஆத்மா) தன்னுடைய அம்சமான சப்தத்தை (நமக்குள் நிரந்தரமாக, எந்த ஒரு கருவியின் உதவியும் இல்லாமல் தானாகவே ஒலிக்கும் ஒலி அல்லது பாட்டு) நோக்கி இழுபட்டு அதில் ஒன்றிணைவது தான் பரமார்த்தம் என்பது.
1 – உலகியல் மற்றும் சுயநலத்தின் செயலும், பரமார்த்தத்தின் செயலும் முற்றிலும் வேறுபட்டவை. சுயநலத்திற்கும் பரமார்த்தத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும், பொருத்தமும் இல்லை. பரமார்த்தம் என்பது உள்நோக்கிய செயலாகவும், உலகியல் மற்றும் சுயநலம் என்பது புறம் நோக்கிய செயலாகவும் இருப்பதுதான் வேறுபாட்டுக்குக் காரணம். சுரத் தன்னுடைய அம்சமான சப்தத்தை நோக்கி இழுபட்டு அதில் ஒன்றிணைவது தான் பரமார்த்தம் என்பது. இதற்கு எதிர்மறையாக சம்சாரம் மற்றும் சுயநல செயல்களில் சுரத்தின் தாரை (நீரோடை), அதாவது ஆற்றல் சக்தி, கீழ் நோக்கி பாய்ந்து, மனம் மற்றும் மாயையில் இறங்கி, சிதறி, வீணாகிறது.
2 - தங்கள் சுயநலம் மற்றும் உலக முன்னேற்றத்தைத் தவிர வேறு எதிலும் அக்கறை கொள்ளாதவர்கள் முற்றிலும் சுயநலம் மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்களுக்குப் பிறகு, சுயநல நோக்கத்துடன் பரமார்த்ததின் பெயரில் உலகத்துடன் தொடர்புடைய புண்ணிய செயல்கள், தானம் செய்தல்,சமுக சேவை, மற்றும் உலகத்தை மேம்படுத்தும் செயல்களை மட்டுமே செய்பவர்கள் இருக்கிறார்கள். இந்த செயல்கள் ஒரு வரம்பிற்குள், ஒரு நிலை வரை சரிதான், ஆனால் இந்த செயல்களின் மூலம் பரமார்த்தத்தில் ஈடுபடுகிறோம் என்று நினைப்பது தவறு. இந்த செயல்கள் அனைத்தும் இந்த உலகத்தையே சார்ந்தவை. இது மட்டுமே அவர்கள் செய்யக்கூடிய வேலை, இது அவர்களின் கடமை, அவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் இந்த உலகத்தில் நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டும். அவர்கள் மேல் நிலை அடைய இன்னும் நிறைய நேரம் மிச்சம் உள்ளது. அவர்கள் இந்த தேசத்தில் வசிப்பவர்களுக்கும், இந்த உலகத்தை உருவாக்கிய உரிமையாளருக்கும் சேவை செய்கிறார்கள். இந்த பிரபஞ்சத்தையும், பிண்ட மற்றும் பிரமமாண்ட பிரபஞ்சங்களையும் விட்டு சந்தோர்களின் தேசம் செல்லும் காலம் வரவில்லை. இதுவும் சரிதான், ஏனென்றால் எல்லோரும் பரமார்த்தத்தில் ஈடுபட்டால் இந்த தேசம் எப்படி இயங்கும்? இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு சீர்திருத்தம், முன்னேற்றம் செய்தாலும், அநீதி, விஷம், அழிவு, தீமை இங்கிருந்து அகற்றப்படவே முடியாது என்று சொல்லப்படுகிறது. இவையெல்லாம் இல்லாமல் போனால் இந்த தேசத்தின் உருவம் அழிந்துவிடும். இந்த உலகம் நீடிக்காது. இங்கே வந்து உருவாகிய மொத்த மற்றும் கடினமான வடிவத்திற்கு விஷம் அவசியம். இந்த படைப்பில் இருந்து விஷம் முற்றிலும் நீக்கப்பட்டால், இந்த வடிவம் நிலைக்காது. இது இந்த ஆதாரத்தில்தான் படைக்கப் பட்டது. இந்த படைப்பு ஐந்து தத்துவங்கள், மூன்று குணங்கள், இருபத்தைந்து இயற்கை தன்மைகள் கொண்டது. இவைகளுடன் விஷமும், அழிவும் இணைந்துள்ளன. இவற்றில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் இந்த பிரபஞ்சத்தை விட்டு வெளியேறுங்கள். உங்கள் சொந்த நிஜமான பிரபஞ்சமான, பிண்ட, அண்ட, பிரமாண்டத்திற்கு அப்பாற்பட்ட சந்தர்களின் தேசமான சத்ததேசத்தை, தயாள் தேசத்தை, அறிந்து அங்கு செல்லுங்கள் என்பதே சந்தோர்களின் பரமார்த்தம்.
Continue reading in the book...
Click here for the Mobile Version
